search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீல் ஆம்ஸ்ட்ராங்"

    • 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.
    • நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

    வாஷிங்டன்:

    நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22 -ந்தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

    இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது.

    சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

    54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார். இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

    அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

    சந்திரனில் முதல்முறையாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் வழங்கிய சந்திரன் துகள்களுக்காக நாசா மீது பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
    நியூயார்க்:

    மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் உள்ளடக்கிய குழுவை நிலாவுக்கு அனுப்பிவைத்தது.


    நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அப்பல்லோ விண்கலத்திலிருந்து, நிலாவில் முதலில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனது பெயரை வரலாற்றில் பொறித்துக்கொண்டார். அங்குள்ள மண், கல் துகள்கள் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பினர். ஜுலை 24-ந் தேதி இந்த விண்கலம் பத்திரமாக பசுபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூமிக்கு விண்கலம் வந்ததும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் ஸ்மித்சோனியன் மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


    இந்நிலையில், நீல் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் மகள் லூராவிற்கு ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இருந்து எடுத்து வந்த துகள்களை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் விண்வெளிக்கு வெளியில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை சாதாரண மக்கள் வைத்திருக்க கூடாது என்பது நாசாவின் விதி. அந்த விதியை மீறி இவர் துகள்களை வைத்திருந்தாக கூறினர்.

    இதையடுத்து, லூரா நாசா மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், இந்த பரிசை என் தந்தையின் நண்பரான நீல் ஆம்ஸ்ட்ராங் 1970-ம் ஆண்டு எனக்கு 10 வயதாக இருக்கும் போது பரிசாக அளித்தார். அதனை நான் வைத்துக்கொள்ள எனக்கு உரிமை உள்ளது எனக்குறிப்பிட்டிருந்தார். நாசா மீது பெண் ஒருவர் வழக்குத்தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×